“கவுண்டமணி சார் என் கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு”.. அதுக்கு இப்படி ஒரு காரணம்.. விசித்ராவின் கசப்பான அனுபவம்..!!

By admin on ஐப்பசி 1, 2023

Spread the love

நடிகை விசித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார். மேலும் கார்த்திகை தீபம் என்னும் சீரியலிலும் விசித்ரா நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் விசித்ரா அளித்த பேட்டியில் சினிமாவில் நடிக்கும் போது நடந்த சம்பவங்கள் குறித்து பேசி இருந்தார்.

   

அதில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் பெரிய குடும்பம் திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நானும் படத்தின் பூஜையில் கலந்து கொண்டேன். அப்போது கே.எஸ் ரவிக்குமார் என் முன்பு கையை பிசைந்து கொண்டு ஏதோ சொல்வது போல வந்து, பிறகு உனக்கும் கவுண்டமணி சாருக்கும் என்ன பிரச்சனை என கேட்டார். அதற்கு நான் அப்படி எந்த பிரச்சனையும் இல்லையே எனக் கூறினேன்.

   

உடனே என்னை அழைத்துக் கொண்டு கவுண்டமணி சாரிடம் சென்று ஒரு வணக்கம் சொல்லு என கூறினார். நான் ஏற்கனவே வணக்கம் சொல்லிவிட்டேன் என கூறினேன். இப்போது மீண்டும் சொல் என கே.எஸ் ரவிக்குமார் கூறியதால் நான் வணக்கம் சார் என கூறினேன். அப்போதுதான் விஷயம் தெரிந்தது. ஏற்கனவே எப்போதோ நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது கவுண்டமணி சாருக்கு வணக்கம் சொல்லவில்லையாம்.

 

இதனால் அவர் விசித்ரா ரொம்ப திமிரு புடிச்ச பொண்ணு. நான் அந்த பெண்ணோட நடிக்க மாட்டேன் என கவுண்டமணி சார் கே.எஸ் ரவிக்குமாரிடம் கூறியிருந்தாராம். ஆனால் நான் பேசியதும் பிரச்சனை முடிந்து விட்டது. ஒரு காலகட்டத்தில் அவருக்கும் எனக்கும் தொடர்பு என்றெல்லாம் வதந்திகள் பரவியது. சினிமா துறையில் இப்படி வதந்திகள் வருவது வழக்கம்தான். அதை பற்றி நான் கண்டு கொள்வது கிடையாது என கூறியுள்ளார்.