தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் முசாசி படத்தில் பிரபுதேவா நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆக்சன் என்டர்டைனர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை ஜாய் ஃபிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. முசாசி படபிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் ஒரு சில பாடல் காட்சிக்காக படக்குழுவினர் தற்போது இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன் பிரபுதேவாவின் முசாசி படக் குழுவினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று பட குழுவினர் நேற்று இலங்கை பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

