லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் லியோ படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ரிலீஸுக்கு முன்னரே லியோ படத்தின் வசூல் குறித்து வெளியான தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ரிலீசுக்கு முன்னரே படம் 450 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் லியோ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.
ரிலீசுக்கு முன்பே தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்த ஒரே திரைப்படம் என்ற சாதனையை படைத்தது லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தரமாக உருவான லியோ படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ரிலீஸுக்கு முன்னரே 450 கோடி வசூலான நிலையில் படத்தின் மொத்த வசூல் 1000 கோடியை தாண்டும் என ரசிகர்களும், பட குழுவினரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

