தென்னிந்திய திரை உலகில் தளபதி விஜய்க்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை விஜய் தனது நடிப்பால் ஈர்த்துள்ளார். ஆரம்ப காலகட்டத்திலேயே விஜய்க்கு ராசியான தயாரிப்பாளர் ஒருவரின் 7 படங்களும் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. அந்த படங்கள் குறித்து பார்ப்போம். முதலில் விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு தொடக்கமாக இருந்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி.

கடந்த 1982-ஆம் ஆண்டு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்ற திரைப்படம் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவியுள்ளார். தொடர்ந்து 20 வருடங்களாக ஆர்.பி.சவுத்ரி திரைப்படங்களை தயாரித்தார். கடந்த 1996-ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் “பூவே உனக்காக” திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை தயாரித்தது ஆர்.பி.சவுத்ரி தான். சுமார் 250 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

இந்த படம் தெலுங்கு, கன்னடா, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 1997-ஆம் ஆண்டு பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான “லவ் டுடே” படமும் பிரம்மாண்ட அளவில் வெற்றி பெற்றது. கடந்த 1998-ஆம் ஆண்டு வெளியான “நினைத்தேன் வந்தாய்” 1999-ஆம் ஆண்டு வெளியான “துள்ளாத மனமும் துள்ளும்” ஆகிய பிளாக்பஸ்டர் படங்களையும் ஆர்.பி.சவுத்ரி தான் தயாரித்துள்ளார். இந்த படங்கள் விஜயின் திரை வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகித்துள்ளது.

அடுத்ததாக 2001-ஆம் ஆண்டு ஆர்.ராஜா இயக்கத்தில் வெளியான _ஷாஜகான்”, 2005-ஆம் ஆண்டு வெளியான “திருப்பாச்சி” ஆகிய திரைப்படங்கள் விஜய்க்கு உச்சகட்ட புகழை தேடி தந்தது. பின்னர் 2014-ஆம் ஆண்டு மோகன்லால் கூட்டணியில் வெளியான “ஜில்லா” திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறும்படத்தக்கது ஆகும். மேற்கூறிய பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்தது ஆர்.பி.சவுத்ரி தான். தளபதியின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகுத்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

