இந்த சிறுவயது புகைப்படத்தில் அம்மாவுடன் கியூட்டாக கொஞ்சி கொண்டிருக்கும் பான் இந்திய டாப் நடிகை யார் தெரியுமா…?

By Begam on புரட்டாதி 27, 2023

Spread the love

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகை தமன்னாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி  உள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா.  தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். குறுகிய காலகட்டத்திலேயே  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்பொழுது இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.

   

இதை தொடர்ந்து அவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தமிழில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த  ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

 

மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தற்பொழுது இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை தமன்னா. நடிகை தமன்னாவும் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக இணையத்தில் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…