Categories: சினிமா

படத்தின் கதையை கேட்டு 5 பவுன் தங்கத்தை அள்ளிக்கொடுத்த தயாரிப்பாளர்.. இயக்குனர் பிரேம் இயக்கும் அடுத்த படம் இதுதானா.?

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 96. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து கௌரி கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள் மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

 

இந்த திரைப்படம் வெளியாகி சுமார் ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் பிரேம்குமார் திட்டமிட்டுள்ளார். ஆனால் முதல் பாகத்தைப் போல இந்த திரைப்படம் ஒரு காதல் கதையாக இருக்காது என்று அவர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஐசரி கணேசின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கதையை கேட்டு அடுத்த நாளில் இயக்குனரை வரவழைத்து அவருக்கு 5 பவுன் தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு கதையை இதுவரை கேட்டதே கிடையாது என்றும் இந்த திரைப்படம் பெரிய ஹிட் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் 96 திரைப்படம் மட்டுமல்லாமல் ஜானு என்ற தெலுங்கு திரைப்படத்தையும், மெய்யழகன் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

இறுதியாக கார்த்தியை வைத்து இவர் இயக்கிய மெய்யழகன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற விட்டாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே விரைவில் 96 படத்தில் இரண்டாம் பாக படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி தான் இந்த படத்தில் நடிக்க உள்ளாரா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

8 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

8 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

8 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

8 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

9 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

9 மணத்தியாலங்கள் ago