சினிமாவை பொருத்தவரையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் ஏராளமான நடிகைகள் தாங்கள் நடித்த சில திரைப்படங்களிலேயே சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள். அதன்படி குறுகிய காலம் மட்டுமே சினிமாவில் பயணித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சிவரஞ்சனி. 90 காலகட்டத்தில் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த இவருடைய உண்மையான பெயர் உமா மகேஸ்வரி. சினிமாவிற்காக சிவரஞ்சனி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவர் 1990 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவரை தமிழ் ரசிகர்கள் கண்ணழகி என்று புகழ்ந்தனர். அதன் பிறகு கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான சிவரஞ்சனி இறுதியாக 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான துர்க்கை அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் மொத்தமாக சினிமாவை விட்டு விலகி விட்டார். சினிமாவை விட்டு விலகிய இவர் பிரபல தெலுங்கு நடிகர் மீகா ஸ்ரீகாந்த் அவர்களை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் விஜயின் மூத்த அண்ணனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் சிவரஞ்சனி சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், சினிமாவுக்காக உமா மகேஸ்வரி என்ற பெயரை சிவரஞ்சனி என மாற்றிக் கொண்டேன். நடிகை வடிவுக்கரசி அவர்களின் உண்மையான பெயர் சிவரஞ்சனி. அதனால் என்னுடைய பெயரை ஊஹா என்று மாற்றினார்கள். இதற்கான அர்த்தம் இமாஜினேஷன் என்பது அதன் பிறகு தான் எனக்கு தெரிந்தது. முதலில் இப்படி ஒரு பெயரை வேண்டாம் என்று தான் நான் சொன்னேன். அதன் பிறகு இந்த பெயரை வைத்து படத்தில் நடித்து முடித்த பிறகு பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த பெயரை சூட்டினார். உமா மகேஸ்வரி என்ற பெயர் சிவரஞ்சனியாக மாறியதற்கு ஒரு ப்ரொடியூசர் தான் காரணம். மனசார வாழ்த்துங்கள் திரைப்படத்தில் இந்த பெயர் வேண்டாம் என்று கூறிவிட்டு அவர்தான் சிவரஞ்சனி என மாற்றினார் என்று கூறியுள்ளார்.
புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…
ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…