சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள குப்புசாமி தெருவில், 80 வயதான ராதா என்ற மூதாட்டி தனது கணவர் இறந்த பின்பு தனியாக வசித்து வந்துள்ளார். இவரது குழந்தைகள் வெவ்வேறு ஊர்களில் வசித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று பெசன்ட் நகரில் உள்ள அவரது மகன் ராம்ஜி யாதவ் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் பாதுகாப்பாக வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்திலேயே அந்த மூதாட்டி மர்மமான முறையில் கொடூரமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், பாண்டி பஜார் காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், மூதாட்டியின் வீட்டில் கடந்த ஐந்து மாதங்களாக வேலை பார்த்து வந்த மேனகா (36) என்ற பணிப்பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மேனகா, தனது கூட்டாளிகளான சந்திரமௌலி மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் இணைந்து நகைகளுக்காக இந்த கொலையை அரங்கேற்ற திட்டம் தீட்டியது அம்பலமானது.
முன்கூட்டியே திட்டமிட்டபடியே, சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த இந்த மூவர் கும்பல், மூதாட்டியின் கழுத்தை நெரித்து ஈவிரக்கமின்றி கொலை செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த எட்டு சவரன் தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் தப்பியுள்ளனர். இந்த ஆதாயக் கொலையில் ஈடுபட்ட பணிப்பெண் மேனகா உட்பட மூன்று பேரையும் கைது செய்த போலீசார், திருடப்பட்ட நகைகள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, அவர்கள் மூவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…