கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்திற்கு உட்பட்ட அட்டிசாரா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், தனது வீட்டின் பின்புறம் இருந்த வாழை மரத்தை வெட்டும்போது எதிர்பாராத துயரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மரம் வெட்டும் வேலையின் போது, இரண்டாம் வகுப்பு படிக்கும் அவரது எட்டு வயது மகன் நிச்சித்தும் அவருடன் இருந்துள்ளான். அப்போது அந்த மரத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்ததால், அதிலிருந்த குளவிகள் சீறியெழுந்து தந்தை மற்றும் மகன் இருவரையும் கடுமையாகக் கொட்டின. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரும் உயிருக்குப் போராடியுள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும் அக்கம் பக்கத்தினரும் குளவிகளை விரட்டிவிட்டு, இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சிறுவன் நிச்சித் பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயமடைந்த தந்தை வெங்கடேஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சிவமொக்காவில் உள்ள மெக்கான் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சாகர் புறநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…