12-வது முடித்திருந்தால் போதும்!… மத்திய அரசில் 731 காலிப்பணியிடங்கள்… சம்பளம் ரூ.35,400… உடனே அப்ளை பண்ணுங்க..!!!

Spread the love

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) தற்போது 731 ஸ்டெனோகிராபர் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை, 01.08.2026 தேதியின்படி கிரேடு ‘C’ பணிக்கு 18 முதல் 30 வயது வரையிலும், கிரேடு ‘D’ பணிக்கு 18 முதல் 27 வயது வரையிலும் இருக்க வேண்டும்; இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.

தேர்வு முறையானது கணினி வழித் தேர்வு மற்றும் சுருக்கெழுத்து திறன் தேர்வு ஆகிய இரு நிலைகளைக் கொண்டது. கணினி வழித் தேர்வில் பொது அறிவுத்திறன், விழிப்புணர்வு மற்றும் ஆங்கில மொழித் திறன் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும், இதில் தவறான பதில்களுக்கு 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்குத் தொடக்கச் சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் வரும் 15.05.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Muthu Mani

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

1 மணத்தியாலம் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

2 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

2 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

2 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

2 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

3 மணத்தியாலங்கள் ago