காதலுக்கு மறுத்த தாய்… 7 வயது சிறுவனை சாக்லேட் கொடுத்து கடத்தி கொடூரமாக கொலை செய்த வங்கி அதிகாரி…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் பக்சுமா பகுதியில் 7 வயது சிறுவன் அங்கத்வீர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுவன் திடீரென காணாமல் போனான். இதுகுறித்து சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களின் உதவியுடன் குற்றவாளியான அர்பித் சர்மா என்பவரைக் கைது செய்தனர்.

காவல்துறை விசாரணையில், கைது செய்யப்பட்ட அர்பித் சர்மா ஒரு வங்கி அதிகாரி என்பதும், அவருக்கும் சிறுவனின் தாய்க்கும் இடையே பழக்கம் இருந்ததும் தெரியவந்தது. சிறுவனின் தந்தை துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், அர்பித் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால், அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண்ணுக்குப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தவும், தங்களது உறவுக்கு அச்சிறுவன் தடையாக இருப்பதாகக் கருதியும் அவனைக் கொலை செய்ய அர்பித் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று காரில் வந்த அர்பித், சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காரில் கடத்திச் சென்று கொலை செய்துள்ளார். முதலில் சிறுவனின் உடலை ஆற்றில் வீசியதாகக் கூறி போலீசாரை திசைதிருப்ப முயன்ற அவர், பின்னர் போலீசாரின் கடுமையான விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரது அடையாளப்படுத்துதலின்படி, ஒரு வயல்வெளியில் இருந்து சிறுவனின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தை வெளிக்கொண்டு வர 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அர்பித் சர்மா மீது கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Swetha

Recent Posts

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் நேர்ந்த கொடூரம்… 20 லட்சம் வரதட்சணைக்காக பறிபோன இளம் பெண்ணின் உயிர்… டெல்லியை உலுக்கிய மர்ம மரணம்…!

டெல்லியில் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆக்ரிதி (28) என்ற இளம் பெண், லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு…

1 minute ago

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… ஓடும் வாகனங்களுக்கு இடையே நடுரோட்டில் தரையிறங்கிய பாராகிளைடர்…!

ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பொதுச் சாலையில் பாராகிளைடர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட…

6 minutes ago

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார்… அரசியல் பரபரப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தாய்மாமா மகனும், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா, அக்கட்சியில்…

15 minutes ago

“அடேங்கப்பா, கதை இப்படித்தான் போகப்போகுதா?…” முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு… ‘ஹார்ட் பீட்’ சீசன் 3 புரோமோ அவுட்… கசிந்தது முக்கிய கதைக்களம்…!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மருத்துவத் தொடர் 'ஹார்ட் பீட்'.…

19 minutes ago

“விஜய்க்கு அந்த தைரியம் இருக்கா…?” த.வெ.க தலைவரை நோக்கி பாய்ந்த 500 கோடி குவாரி விவகாரம்…! எம்பி நேரடி அட்டாக்…!!!

தேனி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு பகுதிகளில் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்த தேனி…

20 minutes ago

டோன்ட் வொரி… அங்கே அவர் இருப்பார்… சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் விஜயபாஸ்கரின் டாக்டர் பாசம்…!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சாலையில் விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து நேற்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.…

21 minutes ago