“குழந்தை கருப்பா இருக்கு, IVF-ல புது குழந்தை பெத்துக்கலாம்”.. 6 வயது மகளை வயிற்றில் உதைத்து… தாய் செய்த உச்சக்கட்ட கொடூரம்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

Spread the love

பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆறு வயது சிறுமியின் மர்ம மரணம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது ஒரு திட்டமிட்ட கொடூரக் கொலை என்பது காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, தாவணகெரேயில் உள்ள சர்வதேசப் பள்ளியின் நிறுவனரும், அச்சிறுமியின் தந்தையுமான பிரவீன் பசப்பா அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு தீவிரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது, குழந்தையின் தாயான பிரியங்கா மற்றும் அவரது நண்பரும் ரியல் எஸ்டேட் அதிபருமான மோகன் ஜி. மகாலிங்கப்பா ஆகியோர் மீது காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த மார்ச் 24 அன்று பிரியங்காவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அவர் தனது காதலன் மோகனுடன் காபி கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, காரில் ஏர் கண்டிஷனரை (AC) ஆன் செய்துவிட்டு, குழந்தைக்கு பிரியாணியும் ஐஸ்கிரீமும் கொடுத்துவிட்டுத் தூங்க வைத்ததாகக் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மறுநாள் காலை குழந்தை கண்விழிக்காததால், உடனடியாக வைட்ஃபீல்டில் உள்ள வைதேகி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் இது சாதாரண மரணம் போலக் காட்டப்பட்டாலும், இதன் பின்னணியில் பெரும் சதி ஒளிந்திருந்தது பின்னர் தெரியவந்தது.

குழந்தையின் தந்தை பிரவீன், பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்று அதை இங்கிலாந்தில் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கும் தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையை ஆய்வு செய்த அவர், குழந்தையின் மரணத்தில் ஏதோ சதி நடந்திருப்பதாக பலத்த சந்தேகம் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் வயிற்றில் பலத்த காயம் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே, பிரியங்காவும் மோகனும் இணைந்து அந்தச் சிறுமியின் வயிற்றில் எட்டி உதைத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாகப் பிரவீன் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் கொடூரக் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தச் சிறுமி தங்களுக்குப் பிறக்கவில்லை என்றும், அவள் பார்ப்பதற்குக் கருப்பாக இருந்ததாலும் அவளைக் கொலை செய்யப் பிரியங்காவும் மோகனும் திட்டம் தீட்டியுள்ளனர். மேலும், இருவரும் இணைந்து வாழத் தொடங்கிய வாழ்க்கைக்கு இந்தச் சிறுமி தடையாக இருந்ததாகவும், அவளைக் கொன்றுவிட்டு ‘ஐவிஎஃப்’ (IVF – செயற்கை கருத்தரித்தல்) முறை மூலம் வேறொரு புதிய குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு செய்திருந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

வழக்கறிஞரான பிரியங்காவிற்கும் பிரவீனுக்கும் இடையே 17 ஆண்டுகால திருமண வாழ்க்கை இருந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு பிரியங்கா ஒரு வழக்கு விஷயமாகப் பெங்களூரு சென்றபோது, சுமார் 1,000 கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிப்பதாகக் கூறிக்கொண்ட தனது கல்லூரித் தோழரும் ரியல் எஸ்டேட் அதிபருமான மோகனுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளத்தொடர்பால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு, 2025 டிசம்பரில் பிரியங்காவும் மோகனும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விவாகரத்திற்குப் பின் மூத்த மகள் தந்தையுடனும், இந்த ஆறு வயது சிறுமி சீகேஹள்ளியில் உள்ள ஒரு வில்லாவில் தாய் பிரியங்கா மற்றும் மோகனுடனும் வசித்து வந்த நிலையில், தற்போது இந்த விபரீதக் கொலை அரங்கேறியுள்ளது.

Nanthini

Recent Posts

காலையிலேயே ஷாக்..! பதவியை ராஜினாமா செய்யும் செல்வப்பெருந்தகை…? அதிர்ச்சியில் காங்கிரஸ்..!!

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை…

6 seconds ago

திடீர் திருப்பம்… மீண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணி.. தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் அந்த ஒரு ட்வீட்….!

தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ள திமுகவும், தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த…

1 minute ago

ரூ .8 கோடி மோசடி செஞ்ச உனக்கு TVK பாதுகாப்பாடா.? சொந்த கட்சி எம்எல்ஏ-வை போனில் வெளுத்து வாங்கிய பிரமுகர் – வைரலாகும் ‘பீப்’ ஆடியோ…!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அக்கட்சியினரின் பல்வேறு செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில்,…

7 minutes ago

அதிமுகவிலிருந்து தவெகவிற்கு செல்வோர் கொள்ளைக்காரர்கள்… அழிவு நிச்சயம்.. ஜான் பாண்டியன் அதிரடி…!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக அறிவித்துள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச்…

15 minutes ago

அரசியல் பிரிவு தனிச் செயலாளராக Route ஜெகதீஷ் நியமனம்… தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக 'The Route' நிறுவனரும், விஜய்யின் முன்னாள் மேலாளருமான…

18 minutes ago

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

8 மணத்தியாலங்கள் ago