உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே இல்லையா?… இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை… உறவினர்களுடன் சேர்ந்து பெற்றோர் செய்த கொடூரம்…!

Spread the love

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜி(27) என்பவர் பெயிண்டர் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கு வினுஷா (23) என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே கடந்த மே மாதம் நான்காவதாக வினிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வறுமை காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்த தம்பதியினர் மூன்று மாதமே ஆன அந்த பெண் குழந்தையை விற்பதற்கு முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தன்னுடைய தோலை சிவரஞ்சனி என்பவரிடம் குழந்தையை விட்டு தரும்படி மாமியார் சரளாவுடன் சேர்ந்து வினிஷா கேட்டுள்ளார்.

பிறகு சிவரஞ்சனி தனது மாமியார் ஆன தூய்மை பணியாளர் சகாயம் ஏரி என்பவரிடம் விவரத்தை கூறிய நிலையில் அவர் தனது தோழியான சுமதி என்பவரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த ஒரு தம்பதிக்கு அந்த பெண் குழந்தையை விற்பதற்கு சுமதி ஏற்பாடு செய்தார். இதற்காக 2.20 லட்சம் வினிஷா தன் கணவரோடு சேர்ந்து பெற்றுக் கொண்டார். இதில் சிவரஞ்சனிக்கு 15,000, சகாய மேரிக்கு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் சரளாவுக்கு 50000 என அந்த தம்பதியினர் பிரித்துக் கொடுத்துள்ளனர். குழந்தையை ஜூலை மாதம் திருவண்ணாமலையை சேர்ந்த அந்த தம்பதியிடம் ஒப்படைத்தனர்.

பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வாரம் ஒரு முறை திருவண்ணாமலை தம்பதி குழந்தையை கண்ணகி நகருக்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது குழந்தையை விற்பனை செய்த தகவல் குழந்தைகள் நல அலுவலருக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் விற்பனை செய்யப்பட்ட ஆறு மாத பெண் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

3 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

3 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

6 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

6 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago