வயசானாலும் மார்க்கெட் குறையாத 5 நடிகைகள்.. செகண்ட் இன்னிங்சில் அஸ்திவாரம் போட்டு உக்காந்துருக்கும் ஜானு..

By Archana

Published on:

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகைக்கான மார்க்கெட் என்பது குறைவான காலகட்டம் மட்டுமே இருக்கும். வயதான தோற்றம் வந்தாலோ, திருமணமாகி குழந்தை பெற்று விட்டாலோ, உடல் பருமன் ஆனாலோ, அவர்களது மார்க்கெட் குறைந்து விடும். குணச்சித்திர கதாபாத்திரங்கள் அல்லது சிலர் சினிமாவை விட்டே வெளியேறி விடுவர். ஆனால் வயதானாலும் அவர்களது மார்க்கெட்டை இழக்காத நடிகைகள் சிலரை பார்க்கலாம்..

1.நயன்தாரா :

   

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. 2005-ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. மலையாளத்தில் இருந்து இறக்குமதி ஆன நடிகை என்றாலும், காலப் போக்கில் தமிழிலேயே செட்டில் ஆகி விட்டார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வரும் நயன்தாரா, முதன்முதலில் ஹீரோயின் மட்டுமே கதையின் நாயகனாக நடித்தால், அது வசூலிலும் வெற்றி பெறும் என்ற டிரெண்டிங்கை அமைத்தவர். அவரை தொடர்ந்து பல நடிகைகளும் அவ்வாறு நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளை கடந்தும் தமிழ் சினிமாவில் முன்னணியில் தனது மார்க்கெட்டை இழக்காமல் இருந்து வருகிறார் நயன்தாரா.

2.த்ரிஷா :

நயனுக்கு அடுத்தப்படியாக நீண்ட காலமாக சினிமாவில் இருந்து வரும் நடிகை த்ரிஷா. நாயகர்களில் எப்படி எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி,கமல், விஜய், அஜித் என போட்டி போட்டு வந்த போது, நாயகிகளில் நயன் -த்ரிஷா என போட்டிப் போட்டு வருவர். இன்றும் இந்தப் போட்டியானது இருந்து வருகிறது. 2002-ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. அதற்கு முன்பு பல படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக கூட்டத்தில் ஒருவராக வந்தவர், படிப்படியாக சினிமாவில் உச்சத்திற்கு வந்தார். தெலுங்கு நடிகர் ராணாவுடன் திருமண நிச்சயம் வரை சென்றவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அத்தோடு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் முழு வீச்சில் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவியாக மிரட்டியவர், லியோ படத்தில் எதார்த்த மனைவியாக நடித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் த்ரிஷா.

3. அனுஷ்கா :

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை அனுஷ்கா. வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படங்களில் ஆண்கள் மட்டுமே ராஜாவாக நடித்து வந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணாலும் அப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அருந்ததி என்ற படத்தின் மூலம் பிற மொழி ரசிகர்களையும் தன்வசப் படுத்தியவர், பாகுபலியில் தேவசேனையாக நம்மை கவர்ந்தார். தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 40 வயதை தாண்டியும் சினிமாவில் அவரது கிரேஸ் குறையவில்லை.

4. சாய் பல்லவி :

எத்தனைப் படங்கள் நடித்தாலும் என்றென்றும் நமக்கு மலர் டீச்சராக நினைவில் இருப்பவர் நடிகை சாய்பல்லவி. 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து இளசுகளின் கனவு கன்னியாக மாறினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வரும் பல்லவிக்கு கிட்டத்தட்ட 30 வயதை தாண்டி விட்டது. சினிமாவிற்குள் வந்து 10 ஆண்டுகள் ஆகியும் இன்றும் சினிமாவில் தனது இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

5. தமன்னா :

மைக்கேல் ஜாக்சி என அழைக்கப்படும் தமன்னா, மில்க் பியூட்டி நடிகை தமன்னாவுக்கு கிட்டத்தட்ட 35 வயது நெருங்கி விட்டது. தமிழில் அஜித்குமார், விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த தமன்னா சில காலங்கள் மார்க்கெட் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். மீண்டும் விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக கவர்ச்சியை கையில் எடுத்த தமன்னாவுக்கு அது மிகப் பெரிய அளவில் கை கொடுத்தது. இப்போது மீண்டும் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

author avatar
Archana