“சடலத்தை நிர்வாணமாக்கி வீதியில் வீசிய கொடூரம்”.. 18 வயது சிறுவனை 57 இடங்களில் வெட்டிய கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் நள்ளிரவு சம்பவம்…!

Spread the love

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த குபேந்திரன் என்ற 18 வயது சிறுவன் தனது நண்பருடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, கண் இமைக்கும் நேரத்திற்குள் குபேந்திரனை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டத் தொடங்கியது. தப்பியோட முயன்ற சிறுவனை விடாமல் விரட்டிச் சென்று கழுத்து உள்ளிட்ட உடல் முழுவதும் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைக் கண்டு உறைந்துபோன அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விளக்குத்தூண் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூர கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த மாதம் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட முன்விரோதமே இந்த படுகொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. திருவிழா கூட்ட நெரிசலில் சிறுவன் குபேந்திரன் தனது நண்பர்களுடன் கழிவறைக்குச் சென்றபோது, அங்கு வந்த முத்துமணி என்பவரின் மீது எதிர்பாராதவிதமாக உரசியுள்ளார். இதனால் இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறியுள்ளது. இதில் குபேந்திரன் தாக்கியதில் முத்துமணியின் காதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த முத்துமணி, தனது காது காயம் ஆறுவதற்குள் குபேந்திரனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று பழிவாங்கும் நோக்கில் கங்கணம் கட்டிக்கொண்டு சமயம் பார்த்துத் திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு குபேந்திரன் கார் பார்க்கிங் வளாகத்தின் மேல்மாடியில் இருப்பதை அறிந்த முத்துமணி, தனது தம்பி ராஜ் மற்றும் நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் குபேந்திரனை மடக்கி, தலைமுடியைப் பிய்த்து எடுத்து 57 இடங்களில் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளனர். அத்துடன் நிற்காமல், சிறுவனின் உடலை நிர்வாணமாக்கி மேலிருந்து கீழே தூக்கி வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட மதுரை திடீர் நகரைச் சேர்ந்த முத்துமணி (28), அவரது தம்பி ராஜ் (26), மேலவாசல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (28), வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (18) மற்றும் முத்துக்குமார் (19) ஆகிய 5 பேரையும் விளக்குத்தூண் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

3 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago