தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக தரப்பிலிருந்து பெண்களைக் கவரும் வகையிலான அதிரடித் திட்டங்கள் கசிந்துள்ளன. கடந்த தேர்தலில் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், வரும் தேர்தலில் இந்தத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்த திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்ட ஊக்கத்தொகையையும் 1,500 ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு வீட்டில் கல்லூரி செல்லும் இரு பிள்ளைகள் மற்றும் தாய் இருந்தால், அந்த ஒரே குடும்பத்திற்கு மாதம் 5,000 ரூபாய் வரை நேரடிப் பணப் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்தத் தேர்தல் வாக்குறுதிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது ‘இல்லத்தரசி கூப்பன்’ (Illatharasi Coupon) திட்டம் தான். ஆண்டுக்கு ஒருமுறை 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகையை ஒரே தவணையாகப் பெற்று, அதன் மூலம் வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி அல்லது மைக்ரோவேவ் அவன் போன்ற வீட்டு உபயோக மின்னணுப் பொருட்களை மக்கள் வாங்கிக்கொள்ளலாம். வருமான வரி செலுத்தாத, ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களின் பெண் தலைவிகளுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல் ரீதியாகப் பார்த்தால், இது பெண் வாக்காளர்களை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் வகுத்துள்ள ஒரு ‘மாஸ்டர் பிளான்’ என்றே கருதப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் பலன்களை உயர்த்துவதோடு, புதிய கூப்பன் திட்டத்தையும் அறிவிப்பதன் மூலம் சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற திமுக முயல்கிறது. விலைவாசி உயர்வு மற்றும் பண்டிகை காலச் செலவுகளைச் சமாளிக்க இந்த 8,000 ரூபாய் கூப்பன் திட்டம் பெண்களுக்கு ஒரு பெரிய பொருளாதாரப் பிடிமானமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ரீதியாகப் பல சவால்கள் இருந்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களிடம் நேரடிப் பணப் பலன்களைக் கொண்டு சேர்ப்பதே தேர்தல் வெற்றிக்கான தாரக மந்திரம் என ஆளுங்கட்சி நம்புகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த ‘5,000 ரூபாய் மாத வருமானக் கணக்கு’ மற்றும் ‘இல்லத்தரசி கூப்பன்’ வியூகம் எதிர்வரும் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுக-வின் தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டங்கள் ‘ஹீரோயின்’ ஆக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…