Categories: சினிமா

பல நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து 100 கோடியை கடந்த கங்குவா… 4 நாள் முடிவில் படம் செய்துள்ள வசூல் எவ்வளவு..?

Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பாக படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோசனை ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்து படக்குழு தொடங்கிவிட்டது. அது மட்டுமல்லாமல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து தான் எங்கு பேசினாலும் பெரும் நம்பிக்கையோடு பேசி வந்தார். இதனை பலரும் ஓவர் பில்டப்பாக பார்த்த நிலையில் படம் 2000 கோடிகளை அசால்டாக வசூல் செய்யும் என்றும் படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது எனவும் கூறினார்கள்.

பாலிவுட்டில் இந்த படத்தை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறார்கள். சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தான் உருவாகியுள்ளது என ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து படத்திற்கு பில்டப் கொடுத்து வந்தனர். சென்னை தொடங்கி மலேசியா வரை படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது. இப்படியான நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

சூர்யா கொடுத்த பில்டப்பை நம்பி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என்று புலம்புகிறார்கள் அவருடைய ரசிகர்கள். பலரும் படம் குறித்து விமர்சனம் செய்த நிலையில் கங்குவா திரைப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் படம் முதல் நாள் 58 கோடி ரூபாய் வசூல் செய்தது.  தற்போது படம் வெளிவந்து 4 நாட்களை கடந்துள்ள நிலையில், இன்று எவ்வளவு வசூல் செய்யும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.  தயாரிப்பு நிறுவனம் 3 நாட்களில் 175 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

10 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

10 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

10 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago