பெண்களே உஷார்!… ஜூஸில் மயக்க மருந்து… தனிமையில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கோவையை உலுக்கிய கூட்டு பாலியல் பலாத்காரம்…!

Spread the love

கோவை மாவட்டம் சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய வீடியோ எடிட்டிங் பெண் தொழிலதிபர் ஒருவருக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக 2023 முதல் கணவரை பிரிந்து தனது 4 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். சூலூர் கலையரங்கம் பின்புறம் உள்ள கட்டிடத்தில் அறை எடுத்து வீடியோ எடிட்டிங் தொழில் செய்து வந்தபோது, அதே கட்டிடத்தின் பக்கத்து அறையில் தங்கியிருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி மரிய ராபின் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெண்ணின் குடும்ப சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்ட மரிய ராபின், அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த ஒரு ஆண்டாக நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், மரிய ராபினுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்து அந்த இளம்பெண் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடந்த சில நாட்களாக இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று மதியம், சமாதானம் பேசுவதாகக் கூறி அந்தோணி மரிய ராபின் தனது நண்பரான திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் சாமுவேல் குமார் (30) என்பவருடன் பெண்ணின் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து, அவர் மயக்கமடைந்த நிலையைப் பயன்படுத்தி இருவரும் சேர்ந்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மயக்கம் தெளிந்து பெண் கேள்வி எழுப்பியபோது, தாங்கள் பாலியல் உறவு கொண்ட காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்துள்ளதாகக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர். மேலும், “என்னை திருமணம் செய்ய வற்புறுத்தினாலோ அல்லது போலீசில் புகார் அளித்தாலோ, இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உன்னையும், உன் மகனையும் கொலை செய்து விடுவோம்” என அந்த கும்பல் கொலை மிரட்டலும் விடுத்துள்ளது.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தைரியமாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து, சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த கிரிஷ் சாமுவேல் குமாரை தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான அந்தோணி மரிய ராபினை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கோவையில் அரங்கேறிய இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

48 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

1 மணத்தியாலம் ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

2 மணத்தியாலங்கள் ago