தமிழக அரசானது மாணவ மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சைக்கிளுக்கான கொள்முதல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவிகளுக்குத் தலா ரூ.4,250 மதிப்பிலும், மாணவர்களுக்குத் தலா ரூ.4,375 மதிப்பிலும் சைக்கிள்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சைக்கிள் வழங்கும் பொழுது 3 வருட உத்தரவாத அட்டையை மாணவர்களுக்கு வழங்குவதை அந்தந்த பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
