5 மணி நேரத்தில் அதிரடி…! மாயமான 3 சிறுமிகள் மீட்பு… மெரினா பீச்சில் சுற்றி திரிந்துவிட்டு கேளம்பாக்கத்தில் பிடிபட்ட விசித்திரம்… போலீஸ் அதிரடி…!!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ஒரே நாளில் மர்மமான முறையில் மாயமான 3 பள்ளிச் சிறுமிகளைத் தமிழ்நாடு காவல்துறையினர் 5 மணி நேர மின்னல் வேக நடவடிக்கையில் சென்னையில் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி, மகேஸ்வரி மற்றும் இவர்களது உறவினரான நித்யா ஆகிய 3 மாணவிகளும் அக்டோபர் 26 அன்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாமல் திடீரென மாயமாகினர். பெற்றோர் கேரளாவில் கூலி வேலை செய்து வரும் சூழலில், 3 சிறுமிகள் ஒரே நேரத்தில் காணாமல் போனது பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் உடனடியாகத் தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், மாயமான சிறுமிகள் 3 பேரும் சென்னைக்கு வந்து இரவில் மெரினா கடற்கரையில் சுற்றித் திரிந்துவிட்டு, பின்னர் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்றது தெரியவந்தது. அங்குச் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் சிறுமிகளை அடையாளம் கண்டு பத்திரமாக மீட்டுத் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

புகாரளிக்கப்பட்ட 5 மணி நேரத்திற்குள் 3 மாணவிகளையும் மீட்ட காவல்துறையினருக்குப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். சிறுமிகள் எதற்காகக் குடும்பத்தினருக்குத் தெரியாமல் சென்னைக்கு ஓடி வந்தார்கள் என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகள் எதற்காகக் குடும்பத்தினருக்குத் தெரியாமல் சென்னைக்கு ஓடி வந்தார்கள் என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

45 minutes ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

1 மணத்தியாலம் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

1 மணத்தியாலம் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

2 மணத்தியாலங்கள் ago