தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை அண்மைக்காலமாக திவ்யா சத்யராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விஜய்யின் அரசியல் புரிதல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, கட்சியின் கொள்கைகள் குறித்து தெளிவான பார்வை இல்லை என்றும், பேப்பரில் எழுதிக் கொடுத்ததைக்கூட விஜய் சரியாகப் பேசுவதில்லை என்றும் விமர்சித்தார். தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பிற கட்சிப் பெண்களை அநாகரீகமாகப் பேசுவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக தொண்டர்களை நோக்கி திவ்யா சத்யராஜ் ஒரு அதிரடி சவாலை முன்வைத்துள்ளார். “உங்களுக்கு உங்கள் தலைவர் மீது உண்மையான பற்று இருந்தால், மூன்று நாட்களுக்குள் அவருடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்புங்கள்; இதற்கான கவுண்ட்டவுன் இப்போதே தொடங்குகிறது” என்று சவால் விடுத்துள்ளார். தொண்டர்களுக்கும் தலைவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பதாகக் கருதும் திவ்யா, விஜய்யின் அணுகுமுறையை இதன் மூலம் விமர்சிக்கத் துணிந்துள்ளார்.
விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேசிய திவ்யா, தவெக தலைவர் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருப்பதாகக் கூறினார். தேர்தல் வாக்குறுதிகள் குறித்தோ அல்லது மக்கள் பிரச்சனைகள் குறித்தோ அவருக்குப் புரிதல் இல்லை என்றால் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். மேலும், தனது தந்தை சத்யராஜ் படப்பிடிப்புக்காகச் சென்றுவிட்டதாகவும், தனது வீட்டில் தன்னையும் தனது தாயையும் தவிர யாரும் இல்லை என்று கூறி தனது வீட்டு முகவரியையும் வெளிப்படையாகத் தெரிவித்து தனது துணிச்சலை வெளிப்படுத்தினார்.
திவ்யா சத்யராஜின் இந்த விமர்சனங்களுக்கு தவெக தொண்டர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதே சமயம், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் கட்சியில் நிலவுவதாகக் கூறி ஏற்கனவே விலகிய நிர்வாகிகளை முன்னிறுத்தி திவ்யா பேசும் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சவாலை ஏற்று தவெக தொண்டர்கள் புகைப்படம் அனுப்புவார்களா அல்லது இந்த விவாதம் மேலும் தீவிரமடையுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…