சென்னை மாநகரில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை சீராகப் பராமரிக்கவும் காவல்துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் அவர்களின் நேரடி உத்தரவின் பேரில், நகரம் முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களுக்கு எதிராக சிறப்பு வேட்டை நடத்தப்பட்டது.
வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக 24 மணி நேரம் நடைபெற்ற இந்த நகர்வலச் சோதனையில், சரித்திரக் குற்றப் பதிவேடு கொண்ட ரவுடிகள் உட்பட மொத்தம் 285 குற்றவாளிகள் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
https://twitter.com/Crime_Selvaraj/status/2098420128119730342/video/1
நகரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் தனித்தனியாகக் காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்தச் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரக் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…