அண்ணி அனுப்பிய ரகசிய மெசேஜ்.. ஆசையோடு ஓடிய தம்பிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நடுக்கடலில் அல்ல, நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்….!

Spread the love

கர்நாடகா மாநிலம், பல்லாரி மாவட்டம் மோகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பசவனகவுடா (27). இவர் கடந்த ஜூன் 7-ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் மோகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், மறுநாள் (ஜூன் 8) பல்லாரியில் உள்ள எல்.எல்.சி (LLC) கால்வாய் அருகே வாலிபர் ஒருவர் உடல் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது மாயமான பசவனகவுடா என்பது உறுதி செய்யப்பட்டது.

கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் பசவனகவுடாவின் மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டது. வாலிபர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர். பசவனகவுடாவின் மொபைல் போன் அழைப்புகள் மற்றும் குடும்பத்தினரின் பின்னணியை ஆராய்ந்தபோது, போலீசாருக்கு வழக்கில் யாரும் எதிர்பாராத ஒரு புதிய திருப்பம் (Twist) காத்திருந்தது.

போலீசாரின் தீவிர விசாரணையில், பசவனகவுடாவை கொலை செய்தது அவருடைய சொந்த அண்ணன் தொட்டபசவகவுடா, அண்ணி ஸ்வேதா மற்றும் ஸ்வேதாவின் சகோதரர் சதீஷ் என்பது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பு அண்ணி ஸ்வேதாவுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவரிடம் இருந்து மொபைல் எண்ணை வாங்கியுள்ளார் பசவனகவுடா. நாளடைவில் அண்ணி என்றும் பாராமல் அவர் மீது மோகம் கொண்டு, தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளையும் (Messages), ஆபாச வீடியோக்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்வேதா பலமுறை எச்சரித்தும், பசவனகவுடா தனது நடத்தையை மாற்றிக்கொள்ளவில்லை.

பசவனகவுடாவின் தொல்லை எல்லை மீறியதால், ஸ்வேதா இதுகுறித்து தனது கணவர் தொட்டபசவகவுடா மற்றும் சகோதரர் சதீஷிடம் கண்ணீருடன் புகார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து பசவனகவுடாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். அதன்படி, கடந்த 7-ம் தேதி ஸ்வேதாவின் மொபைலில் இருந்து, தனியாக வரும்படி பசவனகவுடாவிற்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். ஆசை வார்த்தைகளை நம்பி அங்கு வந்த பசவனகவுடாவை, அண்ணன் தொட்டபசவகவுடாவும் மைத்துனர் சதீஷும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர். பின்னர் போலீசில் சிக்காமல் இருக்க சடலத்தை கால்வாய் அருகே கொண்டு சென்று தீயிட்டு எரித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

8 minutes ago

“வெள்ளைக்கார பாஸை கவர இப்படியா…?” உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்… இணையத்தில் கிளம்பிய விவாதம்… வைரலாகும் வீடியோ…!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…

15 minutes ago

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

22 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

32 minutes ago

விளையாட்டு விபரீதமானதா?!.. வேடிக்கை பார்த்த படக்குழு… என்.டி.ஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாரா?… பல வருடங்களுக்கு பின் வெளியான உண்மை…!!

நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…

40 minutes ago

புது தொடக்கமா?… எவ்வளவு சொல்லியும் கேட்காத விஜய்… ஒரே மேடையில் த்ரிஷாவுடன் மாஸ் என்ட்ரி… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…

50 minutes ago