“4 மணிநேரம் அந்த பொசிஷனில்”… மனைவியை வீட்டிற்குள் சிறைவைத்து டார்ச்சர் செய்த கொடூர கணவன்… வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை…!

Spread the love

மும்பையில் கணவன் ஒருவன் தனது மனைவியை வீட்டிற்குள் சிறைவைத்து, ‘ரூஸ்டர் பொசிஷன்’ (Rooster Position) எனப்படும் நூதன முறையில் 4 மணிநேரம் நிற்க வைத்து சித்ரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த அர்பாஸ் சையத் (25) என்ற அந்த இளைஞருக்கும், அவரது மனைவிக்கும் திருமணம் ஆன புதிதில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே நகர்ந்துள்ளது. ஆனால், சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே குடும்ப விஷயங்கள் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதங்களும் தகராறுகளும் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தக் குடும்பத் தகராறு நாளுக்கு நாள் முற்றிய நிலையில், அர்பாஸ் சையத் தனது மனைவியை வீட்டின் உள்ளேயே சிறைவைத்து கொடூரமான முறையில் சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார். மனைவியை அடிக்கடி சரமாரியாகத் தாக்கியது மட்டுமன்றி, கையில் வாளைக் காட்டி வெட்டிவிடுவதாகவும், முகத்தில் ஆசிட் வீசிவிடுவதாகவும் தொடர்ந்து மிரட்டி பயம்காட்டியுள்ளார். மேலும், மனைவியின் செல்போனையும் பிடுங்கி வைத்துக்கொண்டதால், அவரால் நேர்ந்த கொடுமைகளை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்தச் சித்ரவதைகளின் உச்சகட்டமாக, தனது மனைவியை இரண்டு கைகளை மட்டும் தரையில் ஊன்றி, மொத்த உடலையும் மேல்நோக்கி தூக்கிவைத்தபடி இருக்கும் ‘ரூஸ்டர் பொசிஷன்’ நிலையில் தொடர்ந்து 4 மணிநேரம் நிற்குமாறு கட்டாயப்படுத்தி நூதன முறையில் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்தக் கணவblockகொடூரத்தைத் தாங்க முடியாத அவரது மனைவி, ஒருகட்டத்தில் சமயோசிதமாக வீட்டில் இருந்து தப்பித்துத் தனது தாய் வீட்டிற்குச் சென்று தஞ்சமடைந்துள்ளார்.

மனைவி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அர்பாஸ் சையத், அவரைப் பல இடங்களில் தேடியலைந்து இறுதியாக மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்துத் தனது மனைவியைக் கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார் அர்பாஸ் சையத்தைக் கைது செய்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், அவர் மீது ஏற்கனவே 19 கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரை ரவுடிகள் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மும்பை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

21 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

24 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

33 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

34 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

49 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

55 minutes ago