Categories: சினிமா

2024 ம் வருடம் வெளியாகி முதல் நாளே அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்… ஓர் பார்வை இதோ..!

Spread the love

இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் முதல் நாளே அதிகம் வசூல் செய்த 4 திரைப்படங்கள் குறித்து, இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படமானது முதல் நாளே ரூ.126 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த ஆண்டு முதல் நாளே அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை இப்படம் தக்கவைத்து கொண்டுள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பகத் பாஸில், அமிதாபச்சன், அபிராமி, துஷாரா விஜயன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேட்டையன் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வேட்டையன் திரைப்படம் வெளியான முதல் நாளே ரூ. 69 கோடி வசூல் செய்தது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சில தினங்களுக்கு முன் வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் உலக அளவில் முதல் நாளில் 58 கோடி வசூலித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய இவ்வாறு தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். நம் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாளே ரூ.42 கோடி வசூலித்தது.

தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இது தனுஷின் ஐம்பதாவது படம்.  ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரிலீஸ் ஆன முதல் நாளே 32 கோடி வசூல் செய்தது.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago