தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை மீனா. ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் பொழுதே வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் அவரது கணவர் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது கணவரின் உயிரிழப்பால் மிகப்பெரும் துயரத்தை அடைந்தார் நடிகை மீனா. தற்பொழுது தான் இவர் மெல்ல மெல்ல தனது கணவரின் மரணத்திலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனா தற்பொழுது சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
தற்பொழுது நடிகை மீனாவை மீண்டும் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது நடிகை மீனா பரிசிற்கு 2023 இந்திய உலக கோப்பையை அறிமுகம் செய்து வைக்க சென்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ’உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்று உள்ளேன். என்று மிகவும் பெருமையாக தெரிவித்துள்ளார். ரசிகர்களும், திரைபிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…