தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் பெரிய பட்ஜெட் முதல் சிறிய பட்ஜெட் வரை எடுக்கப்பட்ட அனைத்து படங்களும் அடங்கும். இப்படி எடுக்கப்படும் படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆகின்றன. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் சிறிய பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் என பலவகையில் எடுத்துக் கொண்டாலும் இந்த படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி படங்களாக அமைந்துள்ளது என்று பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். சினிமாவில் பல படங்கள் இன்னும் பல்வேறு பிரச்சனைகளால் பெட்டிக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலையில் தடைகளை தாண்டி பல படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது சாதனைதான்.
அப்படி ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் அவற்றில் சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. அதன்படி 2024 ஆம் ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 200 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் அவற்றில் எத்தனை நல்ல படங்கள், எத்தனை ஓகே படங்கள் மற்றும் எத்தனை அவரேஜ் படங்கள் என்று தெரிந்து கொள்வதும் கூட இனிவரும் காலத்தில் பணத்தை முதலாக போட்டு படம் எடுக்கும் இந்த சினிமாவில் நல்ல படங்களை கொடுப்பதற்கு வழிகாட்டுவதாக இருக்கும். அதன்படி ஐந்து திரைப்படங்கள் மட்டுமே இந்த ஆண்டில் சிறந்த திரைப்படங்களாக உள்ளன.
பிரேமலு:
க்ரிஷ் ஏடி இயக்கத்தில், நஸ்லண் கே கபூர், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் பகத் பாஷையில் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான திரைப்படம் தான் பிரேமலு. இந்த திரைப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலித்து அனைத்து தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளன.
கருடன்:
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் சுமார் 44 கோடி வசூல் செய்துள்ளது.
மகாராஜா:
இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த திரைப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் குவித்து நல்ல வரவேற்பை பெற்றது.
வாழை:
இயக்குனர் மாரி செல்வராஜின் ஆட்டோ பயோகிராபி வகையை சேர்ந்த இந்த திரைப்படத்தை அவரே இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி மற்றும் நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இந்த திரைப்படம் சுமார் 40 கோடி வசூல் செய்துள்ளது.
லப்பர் பந்து:
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த திரைப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் சுமார் 20 கோடிக்கு மேல் வசூல் செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
Ok வகையான திரைப்படங்கள்:
மெரி கிறிஸ்துமஸ், மிசன், வடக்குப்பட்டி ராமசாமி, லவ்வர், பைரி, தி கோட் லைஃப், ஜமா, அந்தகன், போகுமிடம் வெகுதூரமில்லை, சட்டம் என் கையில், மெய் அழகன் ஆகிய படங்கள் ஓகே வகையான படங்கள்.
ஜஸ்ட் மிஸ் மூவிஸ்
இந்த பட்டியலில், ஜே பேபி, இங்க நான் தான் கிங்கு, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் பட்டியலிடபட்டுள்ளது. இதில், விஜயின் தி கோட் இடம்பெறவேயில்லை. குறிப்பாக கொட்டுக்காளி, தி கோட் லைஃப், ஜே பேபி உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் அவற்றை ஏன் ஜஸ்ட் மிஸ் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…