2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் முதல்வரை பிரேமலதா சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்ற நிலையில் நலம் விசாரிக்க மட்டுமே ஸ்டாலினை சந்திக்க சென்றதாக பிரேமலதா கூறினாலும் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பல யூகங்களுக்கு வித்திட்டது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது பிரச்சாரத்தில் யாரையும் விமர்சிக்க போவதில்லை என்று பிரேமலதா கூறியிருந்தார். மேலும் யாரது கூட்டணி வைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.
இதற்கிடையில் தேமுதிகவில் இருந்து கூண்டோடு விலகியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர் அரவை முத்து, அதிமுகவில் இணைந்த நிலையில், அவரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். அதன்படி மாவட்ட அவை தலைவர் ரங்கநாதன், குளித்தலை நகரச் செயலாளர் சுப்பிரமணியன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கடவூர் ஒன்றிய செயலாளர் ஆல்வின் உள்ளிட்ட 200 பேர் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…
யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…
கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…