இந்திய இரயில்வேயின் அங்கமான ஐஆர்சிடிசி (IRCTC), பௌத்த புனிதத் தலங்களுக்குச் செல்லும் சிறப்புச் சுற்றுலா இரயில் பயணங்களுக்கு 20 சதவீதம் வரை கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. இந்த ஜாக்பாட் தள்ளுபடியானது 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2027-ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் குறிப்பிட்ட தேதிகளில் டெல்லியில் இருந்து புறப்படும் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். போத்காயா, வாரணாசி, குஷிநகர் உள்ளிட்ட முக்கிய ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும் இந்தச் சுற்றுலாப் பொதியில், தங்கும் வசதி மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும் என்பதால் பயணிகளுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்ட இந்தச் சிறப்பு இரயிலில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. டெல்லி சஃப்தர்ஜங் நிலையத்திலிருந்து தொடங்கும் இந்தப் பயணம், புத்தரின் புனிதத் தலங்களுடன் ஆக்ராவின் தாஜ்மகஹாலையும் கண்டுகளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 76,905 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றுலா தொகுப்பில், அறிவிக்கப்பட்ட தேதிகளில் முன்பதிவு செய்பவர்கள் 20 சதவீத தள்ளுபடியைப் பெற்றுப் பயனடையலாம் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…