“வெறும் 10-ஆம் வகுப்பு தகுதி போதும்!… இந்திய ராணுவத்தில் 190 பணியிடங்கள்.. கடைசி தேதி நெருங்குகிறது… உடனே விண்ணப்பியுங்கள்”..!!!

Spread the love

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு அமைச்சகம், பனாஜியில் உள்ள 2 சிக்னல் பயிற்சி மையம் மூலமாக 190 CSBO (Civilian Switch Board Operator) கிரேடு-II பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பொதுப் பிரிவினருக்கு 94 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 43 இடங்களும் எனப் பல்வேறு பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் குறைந்தது 6 மாத கால PBX தொலைபேசி இயக்க அனுபவம் உள்ள தகுதியான இந்தியக் குடிமக்கள் வரும் மே 31, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை முறையாக நிரப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்று ஆகியவற்றை PDF வடிவில் இணைத்து sunshine.rise@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சலின் ‘Subject’ பகுதியில் “CSBO விண்ணப்பம் – உங்கள் பெயர்” என்று குறிப்பிடுவது கட்டாயமாகும். ஆன்லைன் வாயிலாக (மின்னஞ்சல்) மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

தேர்வு முறையானது 100 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நடைமுறைத் தேர்வு (Practical Test) என இரு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் நுண்ணறிவுத் திறன் சார்ந்த கேள்விகள் இடம் பெறும். இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அரசுப் பணியில் சேர விரும்புவோர் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க முன்னதாகவே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Muthu Mani

Recent Posts

குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி கூடுதல் விலைக்கு மது விற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…

3 minutes ago

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை தொடரும்… தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…

4 minutes ago

விலகுகிறேன்..! “முஸ்லிம்களுக்கு அதிமுகவில் அங்கீகாரம் இல்லை” ஜவஹர் அலி அதிரடி ராஜினாமா.. அதிர்ச்சியில் எடப்பாடி..!!

"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…

7 minutes ago

சென்னையின் மெகா மாற்றம்..! 2027-ல் திறக்கப்படும் மதுரவாயல் ஈரடுக்கு பாலம்.. போக்குவரத்து நெரிசலுக்கு இனி குட்பை..! முதல்வர் உத்தரவு…!!

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம்…

17 minutes ago

“இங்கே இப்படித்தான் சிகிச்சை செய்வோம்” பெண்ணின் ஆடைகளைக் களைந்து.. மருத்துவர் செய்த அசிங்கம்… பெண் நோயாளி பகீர் வாக்குமூலம்..!!

மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில்…

25 minutes ago

“பணம் கொடுத்தா தான் TC” பெற்றோரிடம் லஞ்சம் கேட்டபோது… கேமராவைக் கண்டதும் நடுங்கிய பள்ளி முதல்வர்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது…

32 minutes ago