“இது எங்க ஏரியா”.. தலையில் கொட்டு வைத்து வம்பிழுத்த வாலிபர்… நண்பர்களோடு சென்று மோதிய 17 வயது சிறுவன்… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கொளத்தூர் முருகன் நகர் பகுதியை சேர்ந்த வீரமணி (47) என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் ஹர்ஷவர்தன் (17) பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு மெக்கானிக் வேலை செய்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹர்ஷவர்தன் மற்றும் அவருடைய நண்பர் கௌதம் இருவரும் இருசக்கர வாகனத்தில் வில்லிவாக்கம் பஜனை கோவில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் தனுஷ் என்பவர் இருசக்கர வாகனத்தை மடக்கி, இது எங்க ஏரியா வண்டியில் வேகமாக வரக்கூடாது என்று ஹர்ஷவர்தன் தலையில் கொட்டுவைத்து அனுப்பியுள்ளார்.

இதனை மனதில் வைத்துக் கொண்டு ஹர்ஷவர்தன் தனது நண்பர்களான கௌதம் வெற்றி மற்றும் சிலரை அழைத்துக் கொண்டே அதே இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த தனுஷை பார்த்து, அன்றைக்கு ஏன் என்னை அடித்தீர்கள் என்று கேட்டபோது தனுஷ் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்தால் அப்படிதான் கொட்டுவோம் என கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த தனுஷ் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும் ஹர்ஷவர்தன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு தரப்பிலும் கற்கள் மற்றும் கட்டைகளால் அடித்து கொண்டனர்.

இதில் ஹர்ஷவர்தன் மட்டும் சிக்கிக் கொள்ள மற்றவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தனுஷ் தரப்பினர் தாக்கியதின் ஹர்ஷவர்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 18 வயதுடைய தருண் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சில சிறுவர்களை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹர்ஷவர்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து சிறுவர்களையும் கைது செய்துள்ளனர்.

Nanthini

Recent Posts

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..! பணம் தர மாட்டியா..? கைக்குழந்தையுடன் இருந்த தாயை ஓட ஓட விரட்டிய போதை ஆசாமி..!!

சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் ஒரு வீடியோ தற்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பதிவில், போதைப்பொருள் உட்கொண்டதாகக்…

9 minutes ago

அதிர்ச்சி..! விளையாடும்போது நேர்ந்த கொடூரம்.. தந்தையின் மடியிலேயே 6 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்..!!

உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அஸ்ஜத், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வண்டிக்கு இடையே தலை மற்றும்…

18 minutes ago

வீர வசனம் பேசுனீங்களே என்னாச்சு..? CM ஜோசப் விஜய் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்..? டிடிவி தினகரன் காட்டம்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அன்றாடம் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய்மூடி…

23 minutes ago

கல்லூரி மாணவி குளிப்பதைத் எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… கைது செய்த போலீஸ்..!!

தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதைத் தனது செல்போனில் எட்டிப்பார்த்த தம்புக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி…

27 minutes ago

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு..? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…

32 minutes ago

BREAKING: கட்டணம் ரத்து.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…

37 minutes ago