“உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதடா?”… 16 வயது சிறுவனை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்….!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் காதலித்த குற்றத்திற்காக 16 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஜ்ஜைனின் பன்வாசா பகுதியைச் சேர்ந்த அச்சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியும் காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் காவல்துறையிடம் தஞ்சம் அடைந்த நிலையில், சிறுவன் சிறையிலடைக்கப்பட்டு சமீபத்தில்தான் விடுதலையாகி தனது மாற்றுத்திறனாளி தாயுடன் வசித்து வந்தான்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தனது தாயின் மருத்துவச் செலவுக்காகப் பணம் திரட்ட உஜ்ஜைனிக்கு வந்த அச்சிறுவனை சிறுமியின் குடும்பத்தினர் வழிமறித்துள்ளனர். சிறுமியின் உறவினர்களான போலா பைராகி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல், அச்சிறுவனை சரமாரியாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமானமற்ற முறையில் அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கியுள்ளனர். பின்னர் சிறுவனின் கைகளை கயிற்றால் கட்டி, சங்கர்பூர் பகுதியிலிருந்து பன்வாசா காவல் நிலையம் வரை வீதியில் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக சிறுவனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தான் தாக்கப்பட்டபோது அங்கிருந்த பொதுமக்களிடம் உதவி கேட்டும் யாரும் முன்வரவில்லை என சிறுவன் வேதனையுடன் தெரிவித்துள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதில் தொடர்புடைய நான்கு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம், தனிமனித உரிமைகளை மீறும் வன்முறைச் செயலாகக் கண்டிக்கப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

8 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

8 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

9 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

9 மணத்தியாலங்கள் ago