டெல்லியின் ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் படிக்கக்கூடிய 16 வயது மாணவன் மெட்ரோ ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் சென்ற மாணவன் டெல்லியின் ராஜேந்திர பிளஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பார்மிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். இது தொடர்பாக மதியம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பதறி அடித்துக் கொண்டு மகனைப் பார்க்க ஓடினர். மாணவர் இருப்பதற்கு முன்பு தன்னுடைய புத்தகப் பையில் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில், சாரி மம்மி, நான் பலமுறை உங்களுடைய இதயத்தை உடைத்து விட்டேன்.
இறுதியாக நான் இதை செய்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னைப்போல வேறு எந்த மாணவனும் இந்த முடிவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் நான் இப்படி செய்தேன். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கடைசி ஆசை. என்னுடைய உடலின் பாகங்கள் ஏதும் வேலை செய்தால் அதனை தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள் என்று மாணவன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். ஆனால் அந்தப் பள்ளியை சேர்ந்த மூன்று ஆசிரியர்களும் பள்ளி முதல்வரும் மாணவனை உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் இது குறித்து புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிகிறது.
மேலும் நாடகப் பயிற்சியின்போது மாணவனை ஓவரா நடிக்கிற என்று மிகவும் அவமானப்படுத்தும் விதமாக பேசியதாகவும் அப்போது பள்ளியின் முதல்வர் இருந்தபோதும் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து உளவியல் ரீதியாக தாக்குதலுக்கு ஆளாகி வந்த மாணவருக்கு தேர்வு மிக நெருக்கத்தில் இருந்ததால் தேர்வுக்கு பிறகு வேறு பள்ளியில் சேர்க்கிறோம் என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஆசிரியர் ஒருவர் மாணவனை பள்ளியில் இருந்து வெளியேற்றிவிட்டு இடமாற்றம் சான்றிதழ் வழங்கி விடுவேன் என்று மிரட்டி வந்ததால் மாணவன் இத்தகைய முடிவை எடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது பள்ளி நிர்வாகத்தின் மீது மாணவனின் தந்தை புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…