#image_title
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் இயக்குனர் ஆனதும் முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.
16 வயதினிலே படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களைப் படம் பார்த்து திகைக்க வைக்கும் இருந்தது. பாரதிராஜாவின் அட்டகாசமான விஷுவல்கள், இளையராஜாவின் உள்ளத்தைத் தொடும் இசை, ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவியின் அட்டகாசமான நடிப்பு என ஒவ்வொன்றும் மிளிர்ந்தது. இந்த படத்துக்கு முன்பு வரை கமல்ஹாசன் ஒரு சாக்லேட் பாயாக, பெண்கள் ரசித்துப் பார்க்கும் நடிகராக இருந்தார்.
ஆனால் இந்த படத்தில் கிராமத்து வெள்ளந்தி இளைஞராக சப்பாணி வேடத்தில் நடித்திருப்பார். படத்தின் ஒரு காட்சியில் கோவணம் மட்டும் அணிந்து நடித்திருப்பார். இந்த காட்சி குறித்து பட ரிலீஸுக்கு முன்பே இண்டஸ்ட்ரியில் தகவல் பரவியுள்ளது. ஏற்கனவே படத்தின் மீது பலருக்கும் அதிருப்தி இருந்த நிலையில் இதுவேறு நெகட்டிவ்வாக பரவி, படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லையாம்.
அப்போது சிறு விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரண், படத்தைப் பார்த்து துணிச்சலாக படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார். அனைவர் எதிர்பார்ப்பையும் மீறி இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கும் மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்ததாம். அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவில் நிலையான விநியோகஸ்தராக மாறி, பின்னர் தயாரிப்பாளர் ஆகி, நடிகரும் ஆனார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…