தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தயாராகி வருகிறது. ஆனால் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென ஸ்டாலினிடம் கறார் காட்டி வரும் நிலையில் கூட்டணியில் இருக்கும் மேலும் சில கட்சிகளும் தொகுதி பகிர தொடர்பாக குரல் எழுப்பி வருகின்றன. அதன்படி தற்போது முஸ்லிம் லீக் கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி பொதுக்குழு கூட்டம் ஏற்று திருச்சியில் மாநில தலைவர் சல்மான் முகமது தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ளவர்களை நீக்கியது சரிதான். ஆனால் இடம் பெயர்ந்தவர்களை நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் ஆணையம் சரி செய்யும் என்று நம்புகிறோம். திமுக கூட்டணியில் முஸ்லிம்கள் போட்டியிட 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம். அதில் ஐந்து தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கேட்போம் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் தற்போது ஸ்டாலினுக்கு இது புதிய சிக்கலாக மாறியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த திமுக அனுதாபி ஞானசேகரன், திடீரென அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பது…
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு விடுத்த "திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்" என்ற எச்சரிக்கை உலக…
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சந்தேகத்தின் பெயரால் கணவனே மனைவியைக் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்…
ஐபிஎல் 2024 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ரோஹித்…
கென்ய நாட்டின் பாரம்பரிய மற்றும் மிகவும் பிரபலமான இனிப்பு வகை சிற்றுண்டியான மாண்டாசி (Mandazi), லேசான இனிப்புச் சுவையுடன் எண்ணெயில்…
சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்…