ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 1,538 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்ற 20 முதல் 28 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் sbi.co.in அல்லது sbi.co.in/careers என்ற இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
இப்பணியிடங்களுக்கான தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வானது ஆங்கிலம், நியூமெரிக்கல் எபிலிட்டி, ரீசனிங் பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் நடைபெறும்; இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 200 மதிப்பெண்களுக்கு 2 மணி 40 நிமிடங்கள் நடைபெறும் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெறுவர். மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை எழுத, படிக்க, பேச மற்றும் புரிந்துகொள்ளும் திறனைச் சரிபார்க்கத் தனியாக உள்ளூர் மொழித் தேர்வும் நடத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்குத் தொடக்க அடிப்படை ஊதியமாக ரூ.19,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வங்கி விதிமுறைகளின்படி அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும். மாநில வாரியான காலியிடங்கள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கக் கடைசி தேதி போன்ற கூடுதல் விவரங்களை வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…