கும்பகோணத்தை உலுக்கிய சம்பவம்…. 11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு…!!

Spread the love

கும்பகோணம் பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்களால் தாக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் இனம்கிளியூரை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று 12ஆம் வகுப்பு மாணவர் மதிய உணவு நேரத்தில் கழிவறைக்கு செல்லும் போது பதினோராம் வகுப்பு மாணவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து வியாழக்கிழமை மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியிலிருந்து வீட்டிற்கு 12 ஆம் வகுப்பு மாணவர் பட்டீஸ்வரம் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது பதினோராம் வகுப்பு மாணவர்கள் அவரை வழிமறித்து மரக்கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அந்த மாணவர் கும்பகோணம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 15 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

44 minutes ago

“விஜய் அலைக்கு பலியான உதயசூரியன்!”… தி.மு.க-வின் படுதோல்விக்குக் காரணமான அந்த 7 ரகசியங்கள்… ஒரு சிறப்புப் பார்வை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்கள் தகர்க்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியமைக்க…

54 minutes ago

“கஜானா காலி!”… ‘தளபதி’யின் திட்டங்களால் அரசுக்கு பேராபத்தா?…மே 7-க்கு அப்புறம் கச்சேரி தெரியும்… நிதி நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…

1 மணத்தியாலம் ago

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

2 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

2 மணத்தியாலங்கள் ago