விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் என்பவரது வீட்டில், ஆள் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதற்கட்ட விசாரணை நடத்தினர். இந்தத் துணிகரச் சம்பவத்தில் சுமார் 122 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் வேட்பாளர் வீட்டிேலேயே இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் சென்று ஆய்வு நடத்திய நிலையில், கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளைக் கைப்பற்றியுள்ள போலீஸார், அதன் அடிப்படையில் தப்பியோடிய மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒருபுறம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் வீட்டில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…