தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. சமீபமாக தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் லட்சக்கணக்கான விடுபட்ட பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்கனவே இந்தத் திட்டத்தில் ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயனடைந்து உள்ளனர். கடந்த ஜூலை மாதம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தொடங்கப்பட்டது . இதுவரை 12 லட்சம் பெண்கள் புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக 2 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது , மாதம் இத்தனை பேருக்கு எப்படி ரூ.1000 கொடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற வேண்டும் என்றால் சில விதிமுறைகள் இருக்க வேண்டும்.
கார் , சொந்த வீடு வைத்திருக்கும் பலரும் தற்போது உரிமைத் தொகை விண்ணப்பித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையான சரிபார்ப்பிற்கு பிறகு தகுதி உடையோருக்கு மட்டுமே கலைஞர் மகளிர் தொகை கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் விடுபட்டவர்களுக்கு பணம் கிடைக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. நவம்பர் மாதம் வரை முகாம்கள் நடைபெற உள்ளது அனைத்து விண்ணப்பங்களையும் சரிபார்த்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியலில் ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…
தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்', நீண்டகாலமாக கோலோச்சி வந்த திராவிடக்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து…