இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பிரசவ கால இழப்புகளை ஈடுசெய்யவும் மத்திய அரசால் ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஏழை மற்றும் பின்தங்கிய பெண்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களைத் தவிர்த்து, 19 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தகுதியுள்ள பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு இரண்டு பிரசவங்களுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு மொத்தம் ₹5,000 நிதியுதவி இரண்டு தவணைகளாக ₹3,000 மற்றும் ₹2,000 வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் நோக்கில், இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாகப் பிறக்கும் பட்சத்தில், ஒரே தவணையாக ₹6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கித் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்பத்தை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அங்கன்வாடி மையங்களில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் குழந்தைகளுக்கான குறிப்பிட்ட கால தடுப்பூசிகளைப் போடுவது கட்டாயமாகும். விண்ணப்பிப்பதற்கு ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், தாய்சேய் நல அட்டை மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் அவசியமாகும். இத்திட்டம் ஏழை எளிய பெண்களின் பிரசவ கால சுமையைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…