கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் பந்தளத்தை சேர்ந்தவர் அஷ்ரப். இவருக்கு ஹன்னா என்ற 11 வயது மகள் உள்ள நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டு பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த பூனை சிறுமியை கால் நகத்தால் பிரண்டியதாக கூறப்படுகிறது. இதில் நகம் கீறியதில் சிறுமி காயம் அடைந்ததால் உடனே பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டு உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பள்ளி ஆசிரியர்கள் அவரது கழுத்தில் வீக்கத்தை கவனித்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இரண்டாவது தடுப்பூசி போட்ட பிறகு சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனில்லாமல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…