2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியான திமுக, தனது தற்போதைய கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு சிறிய கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை இணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கூடுதலாக 10 புதிய அமைப்புகள் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூடுதல் அமைப்புகளின் வருகையினால் தொகுதிப் பங்கீட்டு விவகாரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகவேல் ராஜன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு மற்றும் ராஜ் கவுண்டர் போன்ற முக்கியத் தலைவர்களின் அமைப்புகள் திமுகவுடன் கைகோர்க்கத் தயாராகி வருகின்றன. இதனால், பழைய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து சில தொகுதிகளை விட்டுக் கொடுக்குமாறு திமுக பேச்சுவார்த்தைக் குழு கோரிக்கை விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனும் சுமூகமான உறவைப் பேணி, இந்த மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை முழுமையாக முடிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முனைப்பு காட்டி வருகிறார்.
கடந்த தேர்தல்களைப் போலல்லாமல், இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம் என்பதால், அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்குள்ள சிறிய அமைப்புகளையும் அமைச்சர்கள் மூலம் திமுக தலைமை அரவணைத்துச் செல்கிறது. பலமுனைப் போட்டி நிலவும் சூழலில், அனைத்துத் தரப்பு ஆதரவையும் திரட்டி ஒரு வலுவான மெகா கூட்டணியை அமைப்பதன் மூலம் வெற்றியை உறுதி செய்ய திமுக வியூகம் வகுத்து வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…