இந்தியாவில் பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தையும் தொடக்கத்திலும் நிதி சார்ந்த முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி வருகின்ற ஜனவரி 1 புத்தாண்டு முதல் 10 அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எட்டாவது ஊதிய குழு அமலாக்கம்:
அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக எட்டாவது ஊதிய குழு ஜனவரி 1 முதல் செயல்படுத்த வாய்ப்புள்ளது. இதன் மூலமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 20 முதல் 35 சதவீதம் வரை இருக்கலாம் என்று தெரிகிறது.
வங்கி வட்டி விகிதங்கள், EMI குறைப்பு;
2025 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.25% ஆக குறைத்ததை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ குறையுமென தெரிகிறது. அதே சமயம் நிலையான வைப்பு நிதி வட்டி விகிதங்களிலும் மாற்றம் ஏற்படும்.
ரேஷன் கார்டு:
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இ கேஒய்சி நடைமுறையை முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் ஜனவரி முதல் இலவச ரேஷன் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என அரசு எச்சரித்துள்ளது.
பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பு
வருமானவரித்துறை விதியின்படி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது அவசியம். இணைக்கப்படாத பான் கார்டுகள் முடக்கப்படும். இது நிதி பரிவர்த்தனைகளை பாதிக்கும்.
எரிவாயு விலை குறைப்பு:
ஒருங்கிணைந்த கட்டண முறையில் மாற்றங்கள் செய்யப்படுவதால் ஜனவரி முதல் சிலிண்டர் விலை குறையலாம்.
வாராந்திர கிரெடிட் ஸ்கோர் அப்டேட்:
இனி உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் விவரங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதில் வாரம் ஒரு முறை புதுப்பிக்கப்படும். இதன் மூலமாக கடனை சரியாக செலுத்துபவர்கள் விரைவாக நல்ல ஸ்கோரை பெறலாம்.
யுபிஐ மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு:
ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக யுபிஐ சிம்கார்டு சரிபார்ப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்.
சமூக ஊடகங்களில் வயது கட்டுப்பாடு:
16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு கொண்டுவர உள்ளது. பெற்றோர் கண்காணிப்பு மற்றும் வயது சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பழைய வாகனங்களுக்கு கட்டுப்பாடு:
நாட்டில் மாசுபாட்டை குறைக்கவும் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு முக்கிய நகரங்களில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் புதிய வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பான விதிகள் மாறக்கூடும்..
பயிர் காப்பீட்டு திட்டம்:
விவசாயிகள் தங்களுடைய பயிர்களை காப்பீடு செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இயற்கை சீற்றங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறுவதற்கு அனைவரும் பயிர் காப்பீடு செய்வது அவசியமாகும்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…