யோசிக்காதீங்க…! உடனே என்னோட கார்ல ஏத்துங்க…. ஹாஸ்பிடல் போகலாம்…. திருச்சி கலெக்டரின் மனிதநேயம்…. வைரல் வீடியோ…

By Archana

Published on:

விபத்தில் சிக்கிய ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் கார் கொடுத்து உதவி செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். இதை பார்க்கும் போது நம் மனதில் ஒரு புதுவித உற்சாகத்தை கொடுக்கும்.

   

மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள், இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோவில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த விஜயலட்சுமி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது துறையூர் சாலையில் ஒத்தக்கடை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். அப்போது அந்த பக்கம் வந்த திருச்சி மாவட்ட கலெக்டர் தனது காரில் அவரை ஏற்றி கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதிக்கின்றார்.

author avatar
Archana