மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே…. சைனாக்காரர்கள் செய்த ரீல்ஸ்….. இணையத்தை கலக்கும் வீடியோ…

By Archana

Published on:

மேகம் கருக்குதா என்ற பாடலுக்கு சைனா நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். பெரும்பாலும் இங்கிலீஷ் பாடலுக்கு தான் நாம் ரீல் செய்து வெளியிடுவோம் .

   

ஆனால் தமிழ் பாடலுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த அதுவும் சைனாவை சேர்ந்த மூன்று பேர் அதேபோன்று நடனமாடி வெளியிட்ட வீடியோ தான் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது. தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம் இந்த திரைப்படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் தனுஷுக்கு ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது. படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதுவும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த மேகம் கறுக்காதா என்ற பாடலுக்கு அனைவரும் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by KAKETAKU???? (@kaketaku85)

author avatar
Archana