நீ வாய மூடு….! “விமானத்தில் பயணியும், விமான பணிப்பெண்ணும் வாக்குவாதம் செய்த சம்பவம்”…. வைரலாகும் வீடியோ…

By Archana

Published on:

இஸ்தான்புல் – டெல்லி விமானத்தில் பயணி ஒருவருடன் இண்டிகோ விமான பணிப்பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக சொல்வதற்கு பல வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். பேருந்து, ரயில் விமானம் போன்றவை அவர்களுக்கு உதவியாக உள்ளது.

   

விமானத்தில் பயணம் செய்யும்போது நமக்கு உதவி செய்வதற்கு என்று ஏர் ஹோஸ்டர் என்று அழைக்கப்படும் விமான பணிப்பெண்கள் இருப்பார்கள். அவர்கள் நம்மிடம் மிகவும் அமைதியாக நடந்து கொள்வார்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக ஒரு விமான பணிப்பெண் பயனிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விமானத்தில் பரிமாறப்பட்ட உணவு தொடர்பாக பயணிக்கும் விமான பணிப்பெண்ணிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியானதால் இதற்கு இண்டிகோவும் விரைவாக பதில் கூறியிருந்தது. விமான பணி, பெண் பயணியிடம் நியாயப்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து கட்டி ஏதும் விமான பணிப்பெண்ணிடம் வாயை மூடு என்று கூற அவரும். பதிலுக்கு நீங்கள் வாயை மூடுங்கள் என்று பேச இருவரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். பின்னர் மற்றொரு பெண் அவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

author avatar
Archana