நடிப்பில் தூள் கிளப்பும் டாப் ஹீரோயின்ஸ்… என்ன படிச்சிருக்காங்கன்னு தெரியுமா…?

By admin

Updated on:

திரையுலகில் உள்ள நடிகர், நடிகர்கள் அனைவரும்  நன்கு படித்தவர்கள் என்று ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. கார்த்தி போன்ற  சில நடிகர்கள்  மட்டுமே நன்றாக படித்து உள்ளனர். பல நடிகர்கள் தங்கள் பள்ளி படிப்பை கூட முடிக்கவில்லை. ஆனால் டபுள் டிகிரி கூட படித்து திரை உலகை கலக்கி கொண்டு இருப்பவர்களும் உள்ளனர்.

 

   

 

இவர்களின் மத்தியில் நன்கு படித்த பல  கதாநாயகிகளும் உள்ளனர். இவ்வாறு  தென்னிந்திய திரை உலகை கலக்கும் முன்னணி நடிகைகளின் படிப்பு விவரங்களை பற்றி பார்க்கலாம் .

இந்நிலையில்., தமிழ் மொழியில் பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி தமிழ்,தெலுங்கு என கலக்கும்  சமந்தா  இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம்  மீடியாவுக்குள் வந்து காக்காமுட்டை படத்தில் அறிமுகமான  ஐஸ்வர்யா ராஜேஷ் பி.காம் படித்துள்ளார்.

 

 

HANUMAN என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது கலை பயணத்தை ஆரம்பித்த நித்தியா மேனன் Journalism என்ற படிப்பும், சாமி  சாமி என்ற பாடலைக்  கொண்ட புஷ்பா படத்தின்  மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ராஷ்மிகா சைக்காலஜி,  Journalism மற்றும்  English literature   படித்துள்ளார்கள்.

 

 

ஒரு வார்த்தை ஒரு வருஷம்னு பாடி தமிழ் திரை உலகுக்கு வந்த நயன்தாரா இப்போ  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவாக மாறி உள்ளார். இத்தகைய நயன் English literature படித்து முடித்துள்ளார்.  சீயான் விக்ரமுடன் சாமி படத்தில் அறிமுகமாகிய  திரிஷா பி. பி. ஏ. படித்துள்ளார். மலராக நமக்கு பிரேமம் படத்தில் அறிமுகமான எதார்த்த நடிப்பு நாயகி சாய் பல்லவி மருத்துவ படிப்பு படித்துள்ளார்.