கணவன் மர ணம டைந்த சில மணி நேரத்தில் உ யிரி ழந்த ம னைவி : அ னா தை யான 3 பிள்ளைகளின் அ வல நிலை..!

Spread the love

தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அடுத்தடுத்து உ.யிரிழந்த நிலையில் அவர்களின் 3 பிள்ளைகள் அனாதையாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அண்ணாநகர் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (57). பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்தநிலையில் பிச்சாண்டியின் மனைவி செல்விக்கு (46) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிச்சாண்டி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக பிச்சாண்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வியும், கணவர் பிச்சாண்டி இறந்த சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த பிச்சாண்டி- செல்வி தம்பதிக்கு அகிலா (23) என்ற மகளும், வசந்தகுமார் (22), விமல் (20) ஆகிய 2 மகன்களும் உள்ள நிலையில் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளனர்.

கணவன்- மனைவி இருவரும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தது பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Archana

Recent Posts

“ஐயோ யாராவது காப்பாத்துங்க”…. பிரியாணி அண்டாவில் தவறி விழுந்த ஓட்டுநர்…. ஹோட்டலில் நடந்த கொடூரம்…. நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்….!

புதுச்சேரி வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்ற ஓட்டுநர், மதுபோதையில் உறவினரின் ஹோட்டலுக்குச் சென்றபோது கொதிக்கும் வெந்நீர் அண்டாவில்…

3 minutes ago

“ஜெயிலுக்கு போய் வந்தா அவனையும் முடிப்பேன்”…. மனைவியைக் கொன்று ஃபிரிட்ஜில் பூட்டிய கணவன்… அடுத்த நொடியே செய்த அந்த ஒரு சம்பவம்….!

அசாம் மாநிலம் கவுகாதியைச் சேர்ந்த 30 வயதான ராமானுஜ் கோஸ்வாமி என்பவர், தனது மனைவி ரியா தாலுக்தாரை (25) கொடூரமாகக்…

12 minutes ago

திமுக, அதிமுகவுக்கு ஷாக்…. கம்யூனிஸ்ட்களின் ‘மாஸ்டர் பிளான்’… இடைத்தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்….. விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்….!

தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…

37 minutes ago

ரிசப்ஷன் முடிஞ்சாச்சு… அதிகாலை 5.30 மணிக்கு மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு…. அடுத்த நிமிடமே போன போன் கால்…. திருமண மண்டபத்தில் அதிர்ச்சி….!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…

46 minutes ago

“ஆளுங்கட்சிக்கு ஆபத்தா?”…. “1963 முதல் 2017 வரை”….. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் நடந்த அந்த 4 பெரிய அதிர்ச்சிகள்…. ஆளுங்கட்சியை வீழ்த்திய பரபரப்பு வரலாறு….!

தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…

54 minutes ago

“மக்களிடம் கேட்காம பண்ண முடியாது”…. பரந்தூர் உதாரணத்தை காட்டி விஜய்க்கு திருமாவளவன் போட்ட செக்… முதலமைச்சருக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்…!

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…

1 மணத்தியாலம் ago