CINEMA
குக் வித் கோமாளி பிரபலம் பாலாவா இது, இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க- அழகான புகைப்படம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் ஒரு விதமாக இருந்தார்கள். ஷிவாங்கி-அஷ்வினுடன் லூட்டி அடித்து இருந்தார், புகழ் தனி காமெடி.
பாலா சொல்லவே வேண்டாம் கலாய்ப்பது, ரைமிங், டைமிங் காமெடி என நிகழ்ச்சி முழுவதும் அசத்தி இருந்தார்.
ஷிவாங்கி, புகழ், அஷ்வின் போன்றோர் பட வாய்ப்புகள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் உள்ளனர். பாலாவுக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை என்பது போல் தெரிகிறது.
ஆனால் மக்கள் அவருக்கு கண்டிப்பாக மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என மனதார பாராட்டி வருகிறார்கள்.
தற்போது பாலா அமுதவாணனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற அவருடன் எடுத்த ஒரு பழைய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம பரட்டை தலை பாலாவா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.