கண்டாங்கி சேலையில் செம ஆட்டம்போட்ட கல்லூரி மாணவிகள்.. பாரம்பர்ய உடையில் நம்மூரு பொண்ணுங்க தனி அழகுதான்..!

By Archana on ஏப்ரல் 13, 2021

Spread the love

முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது.

   

இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு இவர் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் பலரும் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர்.

   

 

இங்கும் அப்படித்தான் திருநெல்வேலியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் விழா நடந்தது. இதில் பாரம்பர்யமான கண்டாங்கி சேலை கட்டி, மேடைக்கு தரிசனம் தந்த கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் செம நடனம் போட்டனர். அதிலும் சேலை கட்டி ஆடும் பாடல்களாக தொகுத்து அவர்கள் போட்ட ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. நம்மூரு பெண்களின் அசரவைக்கும் நடனம் என இது இணையத்திலும் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.